உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சாலையோரம் கழிவுகள் குவிப்பு ஊராட்சி நிர்வாகம் அலட்சியம்

சாலையோரம் கழிவுகள் குவிப்பு ஊராட்சி நிர்வாகம் அலட்சியம்

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த பெரியஓபுளாபுரம் ஊராட்சிக்கு உட்பட்டது துராப்பள்ளம் கிராமம். அங்கு, சுண்ணாம்புகுளம் நோக்கி செல்லும் நெடுஞ்சாலையோரம், துராபள்ளம் கிராம மக்களுக்கான சுடுகாடு உள்ளது.பெரிய ஓபுளாபுரம் ஊராட்சி நிர்வாகம் சார்பில், வீரச்சாமி நகர் பகுதியில் உள்ள கடைவீதியில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் மற்றும் இறைச்சி கழிவுகளை அந்த சுடுகாட்டை ஒட்டிய சாலையோரம் குவித்து வருகின்றனர்.இதனால் அப்பகுதி முழுதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரமும் பாதிக்கிறது. அந்த பகுதியில் இரு தனியார் பள்ளிகள் இயங்கி வருவதால், மாணவர்களின் சுகாதாரமும் பாதிக்க வாய்ப்புள்ளதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.துராபள்ளம் கிராம பகுதியில் சேகரமாகும் கழிவுகளை, முறையாக அப்புறப்படுத்தி கிராம மக்களின் சுகாதாரத்தை காக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ