உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / உங்களுடன் ஸ்டாலின் முகாம் மக்களிடம் ஆர்வமில்லை

உங்களுடன் ஸ்டாலின் முகாம் மக்களிடம் ஆர்வமில்லை

திருத்தணி: திருத்தணி நகராட்சியில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் முகாமில், பயனாளிகள் பங்கேற்க ஆர்வம் இல்லாததால் வெறிச்சோடி கிடந்தது. திருத்தணி நகராட்சி, பலிஜாவாரி திருமண மண்டபத்தில், 4 மற்றும் 6ம் வார்டுகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நேற்று நடந்தது. இதில், வருவாய் துறை, சுகாதார துறை, மின்சார வாரியம், நகராட்சி, ஆதிதிராவிடர், மாற்றுத்திறனாளி, கால்நடை, கூட்டுறவு உள்பட, 13க்கும் மேற்பட்ட துறை அலுவலர்கள் பங்கேற்றனர். முகாமை திருத்தணி தி.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரன், நகர்மன்ற தலைவர் சரஸ்வதி பூபதி, துணை தலைவர் சாமிராஜ் ஆகியோர் துவக்கி வைத்தனர். முகாமில், மிக குறைந்த அளவில் தான் மக்கள் வந்து விண்ணப்பித்தனர். குறிப்பாக, மகளிர் உரிமை தொகை, முதியோர் உதவி தொகை ஆகிய அரசு நலதிட்ட உதவிகள் வழங்க கோரி, 120 பேர் விண்ணப்பித்தனர். மீதமுள்ள துறைகளில், ஓரிருவர் மட்டுமே மனு அளித்தனர். இதனால் முகாமில் அலுவலர்கள் மக்கள் வருகைக்காக காத்திருந்தனர். குமரன் நகர் மற்றும் கலைஞர் நகர் பகுதி மக்கள், 'எங்களுக்கு அரசு நலதிட்ட உதவிகள் வேண்டாம். 'தெருக்களில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றி சாலைகளை சீரமைத்து, மழைநீர் வடிகால்வாய் கட்ட வேண்டும்' என, மனு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி