மேலும் செய்திகள்
திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி விழா
22-Mar-2025
திருத்தணி:திருத்தணி காந்தி நகரில் திரவுபதியம்மன் கோவிலில் ஆண்டுதோறும், ஏப்ரல் மாதத்தில் தீமிதி விழா வெகு விமர்சையாக நடந்து வருகிறது.நடப்பாண்டிற்கான தீமிதி விழா நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு பாரத கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து, காலை, 8:00 மணிக்கு உற்சவர் அம்மன் வீதியுலா நடந்தது. வரும் ஏப்.1 ம் தேதி பக்காசூரன் வதம், 2ம் தேதி திரவுபதி அம்மன் திருக்கல்யாணம், 4ம் தேதி சுபத்திரை அம்மன் திருக்கல்யாணம், 7ம் தேதி அர்ஜூனன் தபசு, 13ம் தேதி துரியோதனன் படுகளம் மற்றும் தீ மிதிவிழா, உற்சவர் அம்மன் வீதியுலா நடைபெறுகிறது.மேலும் 14ம் தேதி தருமர் பட்டாபிஷேகத்துடன் தீமிதி விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்து வருகின்றனர்.
22-Mar-2025