உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஆந்திர மாநில எல்லையில் கண்காணிப்பு இல்லை

ஆந்திர மாநில எல்லையில் கண்காணிப்பு இல்லை

பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு ஒன்றியத்தின் மேற்கு, வடக்கு எல்லையில், ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்ட எல்லை அமைந்துள்ளது. இதில் பள்ளிப்பட்டில் இருந்து நெல்வாய் கிராமம் வழியாக சித்துார் செல்லும் சாலை, நகரி செல்லும் சாலை, கார்வேட்நகரம் செல்லும் சாலைகள் மட்டுமே பிரதான வழித்தடங்களாக உள்ளன. இந்த மார்க்கங்களில் ஏராளமான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இது தவிர பள்ளிப்பட்டு ஒன்றியம், கொடிவலசா வழியாக குக்கிராம காட்டுப்பாதை ஒன்றும் உள்ளது. இந்த வழியாக ஆந்திர மாநிலம், வனதுர்காபுரம், பாலசமுத்திரம் வழியாக சித்துாருக்கு தார் சாலை வசதி உள்ளது. ஆந்திர மாநிலம், நகரி ஓஜிகுப்பம், பாலசமுத்திரம் அய்யன்கண்டிகை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தமிழகத்திற்கு போதை பொருட்கள் கடத்தி வரப்படுகின்றன. பிரதான சாலைகளில் போலீசாரின் கண்காணிப்பு உள்ளதால், கடத்தல் ஓரளவிற்கு கட்டுப்பாட்டில் உள்ளது. அதே நேரத்தில் , கண்காணிப்பு குறைவாக உள்ள வனதுர்காபுரம் வழியாக ஆந்திர மாநிலத்தில் இருந்து கடத்தல்காரர்கள் வந்து செல்ல வாய்ப்பு உள்ளது. எனவே வனதுர்காபுரம் சாலையில், கொடிவலசா பகுதியில், ஆர். கே.பேட்டை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ