உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருவள்ளூர் கலெக்டர் உத்தரவிட்டும் சீரமைக்காத திருமழிசை சிப்காட் சாலைகள்

திருவள்ளூர் கலெக்டர் உத்தரவிட்டும் சீரமைக்காத திருமழிசை சிப்காட் சாலைகள்

திருமழிசை:திருவள்ளூர் மாவட்டம், திருமழிசை தொழிற்பேட்டையில், 300க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்குள்ள சாலைகள் மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் தொழிற்சாலைக்கு வருபவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும், கழிவுநீர் கால்வாய் திறந்த வெளியில் இருப்பதால் ஏற்படும் துார்நாற்றத்தால் தொற்று நோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து தொழிற்சாலை உரிமையாளர்கள் சார்பில் தொழிற்பேட்டை வளாகத்திற்குள் தண்ணீர் தேங்காமல் இருக்க கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர்.இதையடுத்து, கடந்த ஜூலை மாதம் 18ம் தேதி, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் திருமழிசை தொழிற்பேட்டையில் ஆய்வு மேற்கொண்டு மழைநீர் தேங்காதவாறு கால்வாய்கள் துார்வாரவும், சாலைகளை சீரமைக்க வேண்டும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டும் கால்வாய்கள் துார்வார மற்றும் சாலைகளை சீரமைக்க அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வருகின்றனர்.எனவே, மாவட்ட நிர்வாகம் தொழிற்பேட்டையில் கழிவுநீர் கால்வாய் மற்றும் சாலை சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என, தொழிற்சாலைக்கு வரும் பணியாளர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை