உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மூன்று ஆண்டுகளாக திறப்பு விழா காணாத திருமழிசை அவசர சிகிச்சை மருத்துவமனை

மூன்று ஆண்டுகளாக திறப்பு விழா காணாத திருமழிசை அவசர சிகிச்சை மருத்துவமனை

திருமழிசை:திருமழிசை தொழிற்பேட்டையில், 4 கோடி ரூபாயில் கட்டப்பட்ட விபத்து மற்றும் அவசரகால சிகிச்சை மருத்துவமனை, மூன்று ஆண்டுகளாகியும் பயன்பாட்டிற்கு வராமல் வீணாகி வருகிறது. திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே திருமழிசை பேரூராட்சி அமைந்துள்ளது. இங்குள்ள சென்னை - பெங்களூரு தேசிய அதிவிரைவு நெடுஞ்சாலை மற்றும் திருமழிசை - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில், தினமும் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்குவோரை காப்பாற்றும் வகையில், தமிழக அரசு, கடந்த 2022ம் ஆண்டு 'நம்மை காப்போம் 48' மருத்துவ திட்டத்தின் கீழ், 4 கோடி ரூபாய் மதிப்பில், திருமழிசையில் விபத்து மற்றும் அவசரகால சிகிச்சை மருத்துவமனையை கட்டியது. மூன்று ஆண்டுகளாகியும், இதுவரை பயன்பாட்டிற்கு வராமல் வீணாகி வருகிறது. எனவே, தமிழக அரசு, அவசர கால சிகிச்சை மருத்துவமனையை பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரி கூறியதாவது: விபத்து மற்றும் அவசரகால சிகிச்சை மருத்துவமனைக்கு, தற்போது சாலை வசதி மட்டும் நிறைவு பெற்றுள்ளது. மேலும், சுற்றுச்சுவர், மின் இணைப்பு, லிப்ட் வசதி மற்றும் பிற பணிகள் நிறைவடைந்தவுடன் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை