உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருத்தணி கவுன்சிலர்கள் கூட்டம்

திருத்தணி கவுன்சிலர்கள் கூட்டம்

திருத்தணி : திருத்தணி நகராட்சி அலுவலகத்தில், கவுன்சிலர்களின் சாதாரண கூட்டம், நகராட்சி தலைவர் சரஸ்வதி தலைமையில் நேற்று நடந்தது. துணை தலைவர் சாமிராஜ் முன்னிலை வகித்தார்.நகராட்சி ஆணையர் பாலசுப்ரமணி வரவேற்றார். கூட்டத்தில் வரவு - செலவு கணக்கு சரி பார்க்கப்பட்டன. தொடர்ந்து, நகராட்சியில் வளர்ச்சி பணிகள் மற்றும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தருவது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.மேலும், நகராட்சியில், சொத்து வரி செலுத்தாத வீடுகள், காலிமனை வரி செலுத்தாத உரிமையாளர்கள் குறித்து கணக்கெடுத்து, வரி வசூல் செய்வது உள்ளிட்டவை குறித்தும் கவுன்சிலர்கள் இடையே விவாதிக்கப்பட்டன.தொடர்ந்து நகராட்சி தலைவர் சரஸ்வதி சார்பில், கவுன்சிலர்கள் மற்றும் நகராட்சி அலுவலக ஊழியர்களுக்கு வேட்டி, புடவை மற்றும் ஆளூயுர காலண்டர் வழங்கப்பட்டன.கூட்டத்தில், 18 கவுன்சிலர்கள், பொறியாளர், பணி மேற்பார்வையாளர் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை