திருத்தணி முருகன் இன்று வீதியுலா
திருத்தணி, ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை தினம், உற்சவர் முருகப் பெருமான் மலைக்கோவிலில் பின்புறம் உள்ள குருக்கள் மற்றும் அர்ச்சகர் வசிக்கும் பகுதிகளில் உள்ள வீதிகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.மறுநாள் மாட்டுப்பொங்கல் தினத்தன்று மேல்திருத்தணியிலும், காணும் பொங்கல் நாளில் திருத்தணி நகரத்திலும் உற்சவர் முருகப் பெருமான் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.அந்த வகையில், இன்று மாலை, பொங்கல் பண்டிகையையொட்டி உற்சவர் முருகப்பெருமான் வள்ளி தொய்வானையுடன் மலைக்கோவில் பின்புறத்தில் சிறப்பு அலங்காரத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.