/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருவள்ளூர் : புகார் பெட்டி;கோவிலில் கூடுதல் கழிப்பறை வசதி ஏற்படுத்த எதிர்பார்ப்பு
திருவள்ளூர் : புகார் பெட்டி;கோவிலில் கூடுதல் கழிப்பறை வசதி ஏற்படுத்த எதிர்பார்ப்பு
கோவிலில் கூடுதல் கழிப்பறை வசதி ஏற்படுத்த எதிர்பார்ப்பு
திருத்தணி முருகன் கோவிலுக்கு, தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர். இந்நிலையில், மலைக்கோவிலில், ஒரேயொரு இடத்தில் மட்டும் இலவச கழிப்பறை மற்றும் குளியல் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.அதாவது, கோவில் பின்புறத்தில் கழிப்பறை அமைந்துள்ளன. மலைக்கோவில் வாகனங்கள் நிறுத்தும் இடம் மற்றும் அங்கிருந்து 1 கி.மீ., துாரம் நடந்து வந்தால் தான் கழிப்பறைக்கு செல்ல முடியும்.வாகனங்களில் நீண்ட துாரத்தில் இருந்து வரும் பக்தர்கள் வாகனத்தில் இருந்து இறங்கும் போது இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே, கோவில் நிர்வாகம் கூடுதல் கழிப்பறை மற்றும் குளியல் அறைகள் ஏற்படுத்த வேண்டும்.