உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருவள்ளூர்: புகார் பெட்டி;சேதமடைந்த தார் சாலை சீரமைக்க கோரிக்கை

திருவள்ளூர்: புகார் பெட்டி;சேதமடைந்த தார் சாலை சீரமைக்க கோரிக்கை

சேதமடைந்த தார் சாலை சீரமைக்க கோரிக்கை

திருத்தணி ஒன்றியம், கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட குமாரகுண்டா கிராமத்தில், 35க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் இருந்து, மத்துார் - புச்சிரெட்டிப்பள்ளி செல்லும் மாநில நெடுஞ்சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்திற்கு செல்வதற்கு, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஒன்றிய நிர்வாகம் தார்ச் சாலை அமைத்தது.இச்சாலையை ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், தற்போது சாலை முழுதும் சேதமடைந்து, ஜல்லிக்கற்கள் சாலையாக மாறியுள்ளது. இதனால், கிராம மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் செல்வதற்கு கடும் சிரமப்படுகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் பழுதடைந்த தார்ச்சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-- க.வெங்கடேசன், குமாரகுண்டா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ