உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / குறைதீர்வு கூட்டத்தில் 19 பேருக்கு ரூ.4 லட்சம் நலத்திட்ட உதவி

குறைதீர்வு கூட்டத்தில் 19 பேருக்கு ரூ.4 லட்சம் நலத்திட்ட உதவி

திருவள்ளூர் : மக்கள் குறைதீர்வு கூட்டத்தில், 19 பேருக்கு, 4 லட்சத்து 5 ஆயிரத்து 600 ரூபாய்க்கான, அரசு நலத்திட்ட உதவிகளை திருவள்ளூர் கலெக்டர் ஆஷிஷ் சட்டர்ஜி வழங்கினார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம், கலெக்டர் ஆஷிஷ் சட்டர்ஜி தலைமையில் நடைபெற்றது. மேலும், இக்கூட்டத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த பொதுமக்கள், தங்களது தனிப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்யவும், உதவிகள் வழங்க கோரியும் மனுக்களை அளித்தனர். எவ்வளவு மனுக்கள்: இலவச பட்டா வேண்டி, 236 மனுக்களும், முதியோர் மற்றும் விதவை உதவித்தொகை கோரி, 74 மனுக்களும், தாட்கோ வங்கி கடன் கோரி 21 மனுக்களும், வேலை வாய்ப்புக்கோரி 17 மனுக்களும், மற்ற உதவிகள் கோரி, 53 மனுக்களும் ஆக மொத்தம் 401 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்கள் மீது, தக்க நடவடிக்கை மேற்கொள்ள, துறை அதிகாரிகளிடம் கலெக்டர் அறிவுறுத்தினார்.

மாற்றுத் திறனாளிகள்: மாற்றுத் திறனாளிகளுக்கு, அதி நவீன செயற்கை அவயம் ஒவ்வொன்றுக்கும், 25 ஆயிரம் ரூபாய் வீதம், மூன்று பயனாளிகளுக்கும், 1,200 ரூபாய் மதிப்பில் செயற்கை அவயம் ஒரு பயனாளிக்கும், பிரெய்லி கை கடிகாரம், கறுப்பு கண்ணாடிகள், மடக்கு ஊன்று கோல்கள் என, 700 ரூபாய் மதிப்பில் 4 பேருக்கும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் துறை சார்பில் சிறந்த பள்ளியில் பிளஸ் 2 பயிலும் மாணவிக்கு கல்வி உதவித்தொகை, 28 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையும், ஆதரவற்ற பெண்கள் திருமண திட்டத்தின் கீழ், ஒருவருக்கு 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையும், அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.விசாகன், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ஜோசப் ரவி, மாவட்ட சமூக நல அலுவலர் ரூத் வெண்ணிலா பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை