உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருவள்ளூரில் 9 தொகுதிகளில் பெண் வாக்காளர்களே அதிகம்

திருவள்ளூரில் 9 தொகுதிகளில் பெண் வாக்காளர்களே அதிகம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல்படி, சட்டசபை தொகுதிகளில் 33 லட்சத்து 83 ஆயிரத்து 710 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகமாக இடம் பெற்றுள்ளனர்.

கட்சி பிரதிநிதிகள்

திருவள்ளூர் மாவட்டத்தில், 10 சட்டசபை தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் வெளியிடப்பட்டது. அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், கலெக்டர் த.பிரபுசங்கர் பட்டியலை வெளியிட்டு பேசியதாவது:இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல் படி, ஜன.1 2024ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு, மாவட்டத்தில் உள்ள, திருவள்ளூர், திருத்தணி, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, பூந்தமல்லி, ஆவடி, அம்பத்துார், மதுரவாயல், மாதவரம் மற்றும் திருவொற்றியூர் ஆகிய 10 சட்டசபை தொகுதிகளின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. மதுர வாயில் தரவி பிற 9 தொகுதிகளில் ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் உள்ளனர்.

1.13 லட்சம் ஏற்பு

சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தின்படி, கடந்த ஆண்டு அக்.27 டிச.9 வரை, 1 லட்சத்து 16 ஆயிரத்து 561 விண்ணப்பங்கள் வரப்பெற்றன. இதில், 1 லட்சத்து 13 ஆயிரத்து 351 விண்ணப்பம் ஏற்கப்பட்டு, 3 ஆயிரத்து 210 விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.இவ்வாறு கலெக்டர் பேசினார்.நிகழ்ச்சியில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் தேர்தல் மாலதி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

புதிய வாக்காளர் சேர்க்கை

திருவள்ளூர் மாவட்டத்தில், ஏப்.1, ஜூலை 1 மற்றும் அக்.1 ஆகிய தேதிகளில், 18 வயதை பூர்த்தி அடையும் இளைஞர்கள், அதற்கு முந்தைய காலாண்டில் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க படிவம் 6 ஐ பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தம் செய்ய விரும்புவோர், இன்று முதல் அனைத்து வேலை நாட்களிலும், வட்டாட்சியர் அலுவலகங்களில் படிவங்களை அளிக்கலாம். மேலும், voters.eci.gov.inஎன்ற இணையதளம் மற்றும் voter helpline App எனும் செயலி மூலமாகவும் படிவங்களை சமர்ப்பிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்