உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சிறுவர் காப்பகம் திறப்பு

சிறுவர் காப்பகம் திறப்பு

திருவள்ளூர் : பேரம்பாக்கம் லயன்ஸ் கிளப், பெல்ஜியம் லயன்ஸ் கிளப் மற்றும் ஐ.ஆர்.சி.டி.எஸ்., தொண்டு நிறுவனம் இணைந்து, ஆதரவற்ற சிறுவர்களுக்கான காப்பகத்தை, சர்வதேச லயன்ஸ் கிளப் பவுண்டேஷன் உதவியுடன், திருவள்ளூர் அடுத்த ஈக்காடு கிராமத்தில் கட்டியுள்ளது.இக்கட்டடத்தின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. பெல்ஜியம் லயன்ஸ் கிளப் பிரதிநிதி புருனோ வேன்டர் ஸ்டிச்சிலி, கட்டடத்தை திறந்து வைத்து பேசினார். பேரம்பாக்கம் லயன்ஸ் டிரஸ்ட் தலைமை நிர்வாகி யேசுதாசன், லயன்ஸ் மாவட்டத் தலைவர் சந்திரசேகர், பேரம்பாக்கம் லயன்ஸ் கிளப் தலைவர் தனவேல், ஈக்காடு ஊராட்சித் தலைவர் முனுசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.ஐ.ஆர்.சி.டி.எஸ்., தொண்டு நிறுவன இயக்குனர் டைட்டஸ் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில், பேரம்பாக்கம் லயன்ஸ் கிளப் உறுப்பினர்கள், வசந்தம் மாற்றுத் திறனாளிகள் சங்க கூட்டமைப்பு பிரதிநிதிகள் மற்றும் சிறுவர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை