உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தாபாக்களில் அனுமதியின்றி மது விற்பனை: நான்கு பேர் கைது

தாபாக்களில் அனுமதியின்றி மது விற்பனை: நான்கு பேர் கைது

பொன்னேரி : டாஸ்மாக் கடையிலிருந்து மொத்தமாக வாங்கி, ஆட்டோவில் கொண்டு சென்ற 60 குவார்ட்டர் மதுபானங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தாபாக்களில் அனுமதியின்றி, மது விற்பனை செய்ததாக நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.பொன்னேரி சப்-டிவிஷனில் உள்ள பகுதிகளில் டாஸ்மாக் பார், பெட்டிக்கடை மற்றும் தாபாக்களில் அனுமதியின்றி மது விற்பனை நடந்து வருகிறது. இதற்காக, கிராமங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் இருந்து மதுபானங்கள் தாபாக்களுக்கு கொண்டு சென்று, அங்கு வரும் மதுபான பிரியர்களுக்கு விற்கப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த பொன்னேரி டி.எஸ்.பி., ஜெகதீஸ்வரன் உத்தரவின்பேரில் பொன்னேரி, மீஞ்சூர், சோழவரம் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது செங்குன்றத்திலிருந்து ஒரக்காடு நோக்கி சென்ற ஆட்டோ ஒன்றை மடக்கி, சோதனை செய்தனர்.சோதனையில் 60 குவார் ட்டர் மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். சோழவரம் பகுதியைச் சேர்ந்த வில்சன், 23, என்பவரை கைது செய்தனர். மேலும், காரனோடை பகுதியை சுற்றிலும் உள்ள தாபாக்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது நான்கு தாபாக்களில் அனுமதியின்றி மது விற்பனை செய்து வந்த தினேஷ், 25, தசரத்பாண்டே, 55, ஜானகிராமன், 35, மற்றும் விஜய், 28 ஆகிய நால்வரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்