உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ரூ.500 கோடியில் வளர்ச்சி பணி திருத்தணி எம்.எல்.ஏ., தகவல்

ரூ.500 கோடியில் வளர்ச்சி பணி திருத்தணி எம்.எல்.ஏ., தகவல்

திருத்தணி:“நான்கரை ஆண்டில் திருத்தணி சட்டசபை தொகுதியில் மட்டும், 500 கோடி ரூபாய் மதிப்பில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன,” என, திருத்தணி தி.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரன் தெரிவித்தார். திருத்தணி ஒன்றியம் கே.ஜி.கண்டிகையில், தமிழ்நாடு பட்டதாரி - முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் சார்பில் ஐம்பெரும் விழா, மாநில செயலர் நரசிம்மன் தலைமையில் நேற்று நடந்தது. மாவட்ட பொருளாளர் அரிபாபு வரவேற்றார். இதில், திருத்தணி தி.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரன் பங்கேற்று, மாவட்ட அளவில் பொது தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கும், 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர்கள், அரசு விருது பெற்ற தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு, பணம் மற்றும் சான்றுகள் வழங்கினார். அதன்பின், அவர் பேசியதாவது: நான்கரை ஆண்டில், திருத்தணி சட்டசபை தொகுதியில், பள்ளி கல்வித்துறைக்கு மட்டும், 70 கோடி ரூபாய் மதிப்பில் புதிய வகுப்பறைகள், ஆய்வகம் மற்றும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பிற துறைகளில், திருத்தணி தொகுதியில், 500 கோடி ரூபாய் மதிப்பில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. புதிதாக பைபாஸ் சாலைகள், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, புதிய பேருந்து நிலையங்கள் உட்பட, பல்வேறு வளர்ச்சி பணிகள் நடந்துள்ளன. இவ்வாறு அவர் பேசினார். அதேபோல், திருத்தணி அரசு கலைக் கல்லுாரி வளாகத்தில், முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணனுக்கு, விரைவில் 50 லட்சம் ரூபாய் மதிப்பில் மணிமண்டபம் அமைக்கப்படும் என, எம்.எல்.ஏ., தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ