உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தேசிய அளவில் சிலம்பம் போட்டி திருவூர், திருநின்றவூர் அணி சாம்பியன்

தேசிய அளவில் சிலம்பம் போட்டி திருவூர், திருநின்றவூர் அணி சாம்பியன்

திருவள்ளூர், கர்நாடக மாநில சிலம்பம் மற்றும் அகில இந்திய சிலம்பம் சங்கம் இணைந்து கர்நாடக மாநிலம் பெங்களூரு அடுத்த அட்டபெலா என்.எம்.ஆர் கன்வென்ஷன் மையத்தில் ஜெ.ஏ சிலம்பம் அகாடமிபெங்களூரு கிளப் நடத்திய மூன்றாவது தேசிய அளவிலான சிலம்பம் போட்டி நடந்தது. நவ. 17ம் தேதி நடந்த போட்டியில் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, புதுச்சேரி, உள்ளிட்ட பல்வேறு மாநிலத்தை சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனையர் பங்கேற்றனர்.இதில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த திருநின்றவூர் நடராஜன் சிலம்பம் கிளப்மற்றும் திருவூர் சிலம்பம் கிளப் சார்ந்த 200க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.வயது வாரியாக நடத்தப்பட்ட போட்டியில் திருநின்றவூர் நடராஜன் சிலம்பம் கிளப் மற்றும் திருவூர் சிலம்பம் கிளப்பை சேர்ந்த மாணவ - மாணவியர் 65 தங்க கோப்பை உட்பட வெள்ளி வெண்கலம் என 105 கோப்பைகளை வென்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை பெற்றனர்.வெற்றி பெற்ற மாணவ - மாணவியர் மற்றும் பயிற்சியாளர்களுக்கு பாராட்டு விழா திருநின்றவூர் மற்றும் திருவூர் கிராம மக்கள் சார்பாக திருநின்றவூர் தாசர் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு திடலில் நடந்தது.இதில் பயிற்சியாளர்கள் நடராஜன் , ராஜா, ஜெயா, துரைராஜ், குணா, பிரான்சிஸ் மற்றும் வெற்றி பெற்றவர்களை தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் அருணன் பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !