மேலும் செய்திகள்
கஞ்சா வியாபாரிகள் 4 பேர் பிடிபட்டனர்
26-Jan-2025
திருத்தணி:திருத்தணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு, சிலர் ஆந்திராவில் இருந்து கஞ்சா பொட்டலங்கள் கடத்தி வந்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, திருத்தணி போலீசார், நேற்று முன்தினம், அரசு பள்ளி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகிக்கும் படி சுற்றித்திரிந்த இருவரை போலீசார் மடக்கி பிடித்தனர்.விசாரணையில், திருத்தணி இந்திரா நகர் சந்தோஷ்குமார், 23, ஆந்திர மாநிலம், நகரி அடுத்த, ஓஜிகுப்பத்தைச் சேர்ந்த ஜெகநாதன், 55, எனவும், இவர்கள் பள்ளி மாணவர்களிடம் ஆசை வார்த்தைகள் கூறி, கஞ்சா விற்று வந்தது தெரிந்தது. அதை தொடர்ந்து, திருத்தணி போலீசார், கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து கைது செய்தனர்.*
26-Jan-2025