குடிசையை அகற்றினால் தீக்குளிப்பதாக மிரட்டல்
ஊத்துக்கோட்டை: நவ. 11-: குடிசையை அகற்றினால், தீக்குளித்து விடுவதாக பம்ப் ஆப்பரேட்டர் மிரட்டல் விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரியபாளையம் அடுத்த அக்கரப்பாக்கம் ஊராட்சியில், பம்ப் ஆப்பரேட்டராக பணியாற்றி வருபவர் கருணாகரன், 40. இவர், இங்குள்ள நீர்நிலை புறம்போக்கு இடத்தில் குடிசை அமைத்துள்ளார். நேற்று, அப்பகுதியில் மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் குளம் அமைக்க அதிகாரிகள் முடிவெடுத்தனர். அதற்கு குடிசை இடையூறாக இருந்ததால், அதை அகற்ற வேண்டும் என, கருணாகரனுக்கு அறிவுறுத்தினர். குடிசையை அகற்றினால் தீக்குளித்து விடு வதாக கூறினார். இதுகுறித்து, எல்லாபுரம் பி.டி.ஓ., குணசேகரன், பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்படி போலீசார் விசாரித்து வருகின்றனர்.