உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  சிப்காட் முகப்பு சாலையில் அச்சுறுத்தும் மெகா பள்ளம்

 சிப்காட் முகப்பு சாலையில் அச்சுறுத்தும் மெகா பள்ளம்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி சிப்காட் நுழைவாயில் முகப்பு சாலையில், வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் 'மெகா' பள்ளத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில், 220 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. தினமும் ஆயிரக்கணக்கான கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் சிப்காட் வளாகத்திற்குள் வந்து செல்கின்றன. சிப்காட் நுழைவாயில் அமைந்துள்ள பிரதான சாலை சேதமடைந்து 'மெகா' பள்ளம் ஏற்பட்டுள்ளது. மழை காலங்களில், அந்த பள்ளத்தில் மழைநீர் தேங்குவதால், பள்ளம் இருப்பது தெரியாமல் வாகனங்கள் அதில் சிக்கி தடுமாற்றம் அடைகின்றன. அந்த சமயங்களில், அச்சத்துடன் அப்பகுதியை வாகன ஓட்டிகள் கடந்து செல்கின்றனர். அடுத்தடுத்து மழை பெய்ய இருப்பதால், பள்ளம் பெரிதாக மாற கூடும் என, வாகன ஓட்டிகள் அச்சப்படுகின்றனர். எனவே, பள்ளத்தை சீரமைக்க, கும்மிடிப்பூண்டி சிப்காட் நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை