உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பெண் மீது தாக்குதல் மூன்று பேருக்கு வலை

பெண் மீது தாக்குதல் மூன்று பேருக்கு வலை

திருத்தணி:திருத்தணி ஒன்றியம், ஆர்.வி.என்.கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயந்தி, 37. இவர் தனக்கு சொந்தமான நிலத்தில், ஜாதி பூ செடிகள் வைத்து பராமரித்து வந்தார்.இந்நிலையில், நேற்று முன்தினம், அதே பகுதியைச் சேர்ந்த சங்கர், 45, என்பவர், முன்விரோதம் காரணமாக, பொக்லைன் இயந்திரம் வாயிலாக, ஜெயந்திக்கு சொந்தமான ஜாதி பூ செடிகளை அகற்றியுள்ளார்.இதுகுறித்து தகவல் அறிந்ததும், ஜெயந்தி விரைந்து சென்று கேட்ட போது, சங்கர் மற்றும் அவரது உறவினர்களான ஆனந்தன், அவரது மனைவி கீதா ஆகியோர், ஜெயந்தியை சரமாரியாக தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.காயமடைந்த ஜெயந்தி, திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்து, திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து, மேற்கண்ட மூவரையும் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை