மேலும் செய்திகள்
திருத்தணி கோவிலில் கந்த சஷ்டி விழா துவக்கம்
03-Nov-2024
திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலில், கடந்த, 2ம் தேதி கந்த சஷ்டி விழா துவங்கியது. தினமும் காவடி மண்டபத்தில் உற்சவர் சண்முகப்பெருமானுக்கு லட்சார்ச்சனை காலை, 8:00 மணி முதல் இரவு, 7:00 மணி வரை நடத்தப்பட்டது. சஷ்டி விழாவை ஒட்டி ஆறு நாட்களும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் உற்சவர் பெருமானு க்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.நேற்று முன்தினம் மாலை உற்சவர் சண்முகப்பெருமானுக்கு புஷ்பாஞ்சலி நடந்தது.கந்த சஷ்டிவிழாவின் நிறைவு நாளான நேற்று காலை, 10:00 மணிக்கு உற்சவ முருகர் பெருமானுக்கும் தெய்வானைக்கும் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது.முன்னதாக மலைக்கோவில் அலுவலகத்தில் இருந்து அறக்காவலர் குழுத் தலைவர் ஸ்ரீதரன், இணை ஆணையர் ரமணி, அறங்காவலர்கள் உஷாரவி, மோகனன், சுரேஷ்பாபு, நாகன் ஆகியோர் சீர்வரிசை காவடி மண்டபத்திற்கு கொண்டு சென்றனர்.அங்கு உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானைக்கும், வேதவிற்பன்னர்கள் மரந்திங்கள் முழக்க திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து ஹோமம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது.இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முருகப் பெருமானை தரிசித்தனர்.திருக்கல்யாணம் தொடர்ந்து பெண்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மஞ்சள் குங்குமம், தாலி வழங்கப்பட்டது.
03-Nov-2024