உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருத்தணி முருகன் கோவில் ராஜகோபுரம் பணிகள் தாமதம்

திருத்தணி முருகன் கோவில் ராஜகோபுரம் பணிகள் தாமதம்

திருத்தணி:திருத்தணி முருகன் கோவில் மலைப்படி வழியில், 4.50 கோடியில், ஒன்பது நிலை ராஜகோபுரம் கட்டும் பணி, நான்கு ஆண்டுக்கு முன் நிறைவடைந்தது. ஆனால், ராஜகோபுரத்தில் இருந்து மாடவீதிக்கு இணைப்பு, 56 படிகள் அமைக்கப்படாமல் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.இந்நிலையில், ராஜகோபுரத்தையும், மாடவீதியையும் இணைக்கும் வகையில், 92 லட்சம் ரூபாய் செலவில் 56 படிகள் அமைக்கும் பணி, 2022 மார்ச்சில் துவக்கப்பட்டது. ராஜகோபுரத்தையும், மாடவீதிக்கும் இணைக்கும் படிகள் அமைப்பதற்கு, மண் நிரப்பி சமன் செய்தனர். அதன் பிறகு, படிகள் அமைக்கும் பணி தொடங்காமல், இரு ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. மேலும் படிகள் அமைக்க சமன் செய்யப்பட்ட மண், மழையால் சரிந்தும், மழை நீரால் அடித்து செல்லப்பட்டுள்ளது. இந்த மண் மலைப்படிகளில் நிரம்புவதால், பக்தர்கள் நடந்து செல்வதற்கு சிரமப்படுகின்றனர். 'முருகன் கோவில் படிகள் அமைக்கும் பணிகளை விரைந்து முடித்து, ராஜகோபுரத்திற்கு கும்பாபிேஷகம் நடத்த வேண்டும்' என, பக்தர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். எனவே இப்பணிகளை விரைந்து முடிக்க சமூக ஆர்வலர்களும் எதிர்பார்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !