உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருவள்ளூர்: புகார்பெட்டி; ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயர்த்தப்படுமா?

திருவள்ளூர்: புகார்பெட்டி; ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயர்த்தப்படுமா?

ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயர்த்தப்படுமா?

திருவாலங்காடு ஒன்றியம், பூனிமாங்காடு பகுதியில் இயங்கி வரும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, பூனிமாங்காடு, நல்லாட்டூர், சிவாடா, நெமிலி, அரும்பாக்கம் உட்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து, தினமும் நுாற்றுக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கின்றனர்.மேலும், கர்ப்பிணிகளுக்கு பிரசவம் மற்றும் கு.க., அறுவை செய்யப்படுகிறது. ஆனால், ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயர்த்தாததால், உள்நோயாளிகள் தங்குவதற்கு போதிய படுக்கை வசதிகள் இல்லை.மேலும், எக்ஸ்-ரே, அறுவை சிகிச்சை என்றால், திருத்தணி அல்லது திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.எனவே மாவட்ட நிர்வாகம் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ஆர். வெங்கடேசன்,பூனிமாங்காடு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி