உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருவள்ளூர் தொகுதி: காங்கிரஸ் சார்பில் போட்டியிட யாருக்கு வாய்ப்பு?

திருவள்ளூர் தொகுதி: காங்கிரஸ் சார்பில் போட்டியிட யாருக்கு வாய்ப்பு?

சென்னை: திருவள்ளூர் லோக்சபா தொகுதிக்கு ஜாதி சமன்பாட்டின் அடிப்படையில் ஆதிதிராவிடர் பிரிவை சேர்ந்தவருக்கு வேட்பாளராக அறிவிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 9 தொகுதிகள் தமிழகத்தில் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் சிவகங்கை, விருதுநகர், கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர் ஆகிய தொகுதிகளில் மட்டும் மீண்டும் காங்கிரஸ் போட்டியிடுவதற்கு ஒதுக்கப்பட்டுள்ளன.இந்த தொகுதிகளை தவிர திருநெல்வேலி, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய தொகுதிகள் புதிய தொகுதிகளாக காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த ஒன்பது தொகுதிகளில் திருவள்ளூர் தொகுதிக்கு மட்டும் அக்கட்சியின் நிர்வாகிகள் மத்தியில் கடும் போட்டோ போட்டி உருவாகியுள்ளது. தற்போதைய சிட்டிங் எம்பி டாக்டர் ஜெயக்குமார் தலித் காங்கிரஸ் மாநாட்டில் சர்ச்சைக்குரிய வகையில் பேசி மேலிடத்தின் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளார். இதனால் அவர் மீண்டும் போட்டியிடுவதை காங்கிரஸ் மேலிடம் விரும்பவில்லை. அதேசமயம் திமுக மேலிடமும் எடுத்துள்ள சர்வே ரிப்போர்ட்டில் ஜெயக்குமாருக்கு சாதகமாக இல்லை. இதனால் அத்தொகுதிக்கு பட்டியல் இனத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.பி., விஸ்வநாதன் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார்.இவர் தற்போது கேரளா மாநில காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளராகவும் அகில இந்திய காங்கிரஸ் செயலாளராகவும் இருக்கிறார். கடந்த 2009ம் ஆண்டின் லோக்சபா தேர்தலில் காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிட்டு தொகுதி வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியவர்.திருவள்ளூர் தொகுதியில் 90% ஆதிதிராவிடர் சமுதாயத்தினர் இருக்கின்றனர் எனவே ராகுலின் தீவிர விசுவாசியான எனக்கு ஆதிதிராவிடர் சமுதாய சேர்ந்த என்னை வேட்பாளராக அறிவிக்க தாங்கள் பரிசீலனை செய்வீர்கள் என்ற நம்பிக்கையில் உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை