உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தரைப்பாலம் மூழ்கியதால் போக்குவரத்து பாதிப்பு

தரைப்பாலம் மூழ்கியதால் போக்குவரத்து பாதிப்பு

பொன்னேரி: தேவதானத்தில் ஏரி நிரம்பி, அங்குள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்து செல்வதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பொன்னேரி அடுத்த தேவதானம் கிராமத்தில் இருந்து வெள்ளகுளம் செல்லும் சாலையில், ஏரியின் கலங்கல் பகுதியை ஒட்டி தரைப்பாலம் உள்ளது. தேவதானம், காணியம்பாக்கம், தோட்டக்காடு உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள், இந்த தரைப்பாலத்தின் வழியாக பொன்னேரி சென்று வருகின்றனர். சில நாட்களாக பெய்து வரும் கனமழையால், தேவதானம் ஏரி நிரம்பி, கலங்கல் வழியாக உபரிநீர் வெளியேறி வருகிறது. அங்குள்ள தரைப்பாலத்தை உபரிநீர் மூழ்கடித்து செல்வதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், வாகனங்கள் மாற்று திசையில் சென்று வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில், இந்த தரைப்பாலம் மூழ்கிவிடுவதால், கிராம மக்களின் சிரமம் தொடர்கிறது. எனவே, மேம்பாலம் அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். அதேபோல், சுருட்டப்பள்ளி அணைக்கட்டு நிரம்பி, உபரிநீர் ஆரணி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை