உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மின் ஒயரில் கொக்கி சிக்கி பழுது கும்மிடியில் ரயில் சேவை பாதிப்பு

மின் ஒயரில் கொக்கி சிக்கி பழுது கும்மிடியில் ரயில் சேவை பாதிப்பு

மீஞ்சூர்:சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் தினமும், 80 புறநகர் ரயில்கள் இயக்கப்படுகின்றன.நேற்று கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை நோக்கி சென்ற விரைவு ரயிலின் இன்ஜின் ஒன்று பயணித்தது. அத்திப்பட்டு புதுநகர் - எண்ணுார் ரயில் நிலையங்களுக்கு இடையே சென்றபோது, இன்ஜனின் 'மேல் பகுதியில் உள்ள 'பாண்டோகிராப்' எனப்படும் கொக்கி பழுதானது. இது தண்டவாளத்திற்கு மேலே பயணிக்கும் உயர் அழுத்த கம்பியில் இருந்து மின்சாரத்தை உள்வாங்கி ரயிலுக்கு அனுப்பி, இன்ஜினை செயல்பட வைக்கும் கருவியாகும்.இந்த கொக்கி பழுதாகி, மின் ஒயரில் சிக்கியதால், ரயில் இன்ஜின் அங்கேயே நின்றது. இதனால் அடுத்தடுத்து வந்த வந்த ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. தகவல் அறிந்த ரயில்வே பராமரிப்புத்துறையினர் அங்கு விரைந்தனர். பழுதான 'பாண்டோகிராப்' மின்கொக்கியை சீரமைக்கும் பணியை மேற்கொண்டனர். ஒரு மணிநேரத்திற்கு பின், சரிசெய்யப்பட்டு ரயில் இன்ஜின் புறப்பட்டது. அதை தொடர்ந்து புறநகர் ரயில்கள் ஒரு மணிநேர தாமத்துடன் பயணித்தன. இதனால் பயணியர் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.நேற்று, பராமரிப்பு பணிகளுக்காக, நான்கு மணிநேரம் ரயில் சேவை நிறுத்தப்பட்டிருந்தது. இன்ஜின் கொக்கி பழுதால் மேலும் கூடுதலாக ஒரு மணிநேரம் ரயில் சேவை பாதித்தது. **


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ