உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / செடி, கொடிகள் படர்ந்து மாயமான மின்மாற்றி, மின்கம்பங்கள்

செடி, கொடிகள் படர்ந்து மாயமான மின்மாற்றி, மின்கம்பங்கள்

திருவள்ளூர் : திருமழிசை - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலை வழியே தினமும் அரசு, தனியார், பள்ளி, கல்லுாரி, தொழிற்சாலை பேருந்து, கனரக லாரி, ஆட்டோ, ேஷர் ஆட்டோ, இருசக்கர வாகனம் என, தினமும் 25,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.இந்த நெடுஞ்சாலையோரம் உள்ள மின்கம்பங்கள், மின்மாற்றிகள் செடி, கொடிகள் படர்ந்து உள்ளது.இதனால் இவ்வழியே வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.இதேபோல் மாவட்டத்தில் பல பகுதிகளில் நெடுஞ்சாலையோரம் உள்ள மின்கம்பங்கள் செடி, கொடிகள் படர்ந்து உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் சாலையோரம் புதர் சூழ்ந்து கிடக்கும் மின்கம்பங்கள், மின்மாற்றிகள் குறித்து ஆய்வு செய்து படர்ந்துள்ள செடி, கொடிகள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை