அரசு பள்ளி வளாகத்தில் மரக்கிளைகள் வெட்டி அகற்றம்
ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை ஒன்றியம், கோபாலபுரம் கிராமத்தில், 150 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கிராமத்தின் கிழக்கில் அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.இதில், 1 - 8ம் வகுப்பு வரை, 100 மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளி வளாகத்தில் மரங்கள் வரிசையாக வளர்ந்துள்ளன.இந்நிலையில், தற்போது இந்த மரங்களின் கிளைகள் வெட்டி அகற்றப்பட்டு வருகின்றன. பள்ளி வகுப்பறை கட்டடங்களுக்கு புதிதாக வண்ணம் தீட்ட ஏதுவாக இந்த மரக்கிளைகள் வெட்டி அகற்றப்படுகின்றன.மேலும், வகுப்பறை கட்டடத்தின் மேல்தளத்தில் குவியும் இலை மற்றும் சருகுகளால் மழைநீர் வடிவதில் சிக்கல் ஏற்படுகிறது.மேல்தளத்திலேயே மழைநீர் தேங்குவதால், வலுவிழக்கும் நிலையும் ஏற்படுகிறது. இதற்காக, மரக்களைகளை வெட்டி அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.