உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  குடிநீர், தெருவிளக்கு வசதி கோரி பழங்குடியின மக்கள் முற்றுகை

 குடிநீர், தெருவிளக்கு வசதி கோரி பழங்குடியின மக்கள் முற்றுகை

திருத்தணி: பழங்குடியினர் குடியிருப்புகளில் குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக் கோரி, திருத்தணி ஒன்றிய அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். திருத்தணி ஒன்றியம் செருக்கனுார், பங்களாமேடு மற்றும் வீரகநல்லுார் பகத்சிங் நகர் ஆகிய பகுதிகளில், 80க்கும் மேற்பட்ட பழங்குடியினர் வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு தேவையான குடிநீர், தெரு விளக்கு மற்றும் கால்வாய் வசதி ஏற்படுத்தி தராமல், ஊராட்சி நிர்வாகம் மெத்தனம் காட்டி வருகிறது. இதனால், ஆத்திரம் அடைந்த 75க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள், நேற்று திருத்தணி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து, வட்டார வளர்ச்சி அலுவலர் சந்தானம் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்டோர், அவர்களிடம் பேச்சு நடத்தினர். பின், குடிநீர், தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரப்படும் என, உறுதி அளித்ததையடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை