உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அரசு பள்ளி வளாகத்தில் குப்பை கழிவால் அவதி

அரசு பள்ளி வளாகத்தில் குப்பை கழிவால் அவதி

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை ஒன்றியம், அம்மனேரி ஊராட்சிக்கு உட்பட்டது கொண்டாபுரம் கிராமம். இங்குள்ள அரசு தொடக்க பள்ளி மற்றும் உயர்நிலை பள்ளி ஆகிய இரண்டும், ஒருங்கிணைந்த வளாகத்தில் செயல்பட்டு வருகின்றன. பள்ளியில், ஏழு வகுப்பறை கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இதில், ஆறு கட்டடங்கள் சமீபத்தில் புனரமைக்கப்பட்டன. சீரான கட்டட வசதி மற்றும் இணைய வசதியுடன் கூடிய ஆய்வகமும் அமைந்துள்ளது. இதனால், பேருந்து வசதி இல்லாத இந்த கிராம மாணவர்கள், உள்ளூரிலேயே சிறப்பான கல்வி பெற வழி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது இந்த பள்ளிக்கு முறையான சுற்றுச்சுவர், வாயிற்கதவு உள்ளிட்டவை இல்லாததால், பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. மேலும், பள்ளியில் குவியும் குப்பை, பள்ளி வளாகத்திலேயே கொட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால், பெற்றோர் அதிருப்தி அடைந்துள்ளனர். பள்ளி வளாகத்தை துாய்மையாக பராமரிக்கவும், சுற்றுச்சுவர் மற்றும் வாயிற்கதவு அமைக்கவும் பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை