உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கஞ்சா கடத்தல் இருவர் கைது

கஞ்சா கடத்தல் இருவர் கைது

ஊத்துக்கோட்டை:ஆந்திராவில் இருந்து, தமிழகத்திற்கு ஊத்துக்கோட்டை வழியே, கஞ்சா கடத்தி வருவதாக, எஸ்.பி.,க்கு தகவல் கிடைத்தது. திருவள்ளூர் எஸ்.பி., சீனிவாசபெருமாள் உத்தரவின்படி, பெரியபாளையம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார், ஊத்துக்கோட்டை அண்ணாநகர் பகுதியில் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர்.அப்போது அவ்வழியே வந்த மூன்று டூ - வீலர்களை போலீசார் மடக்கினர். அவர்கள், சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ஜெரால்டு லுார்துனாதன், 43, வினோத்குமார், 40, என, தெரிந்தது. அவர்களிடம் இருந்து, 8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.கைது செய்யப்பட்ட இருவரும், ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.மேலும், தப்பி ஓடிய சுமன், அப்பு, ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ