மேலும் செய்திகள்
வீட்டில் பதுங்கிய பாம்பு மீட்பு
26-Aug-2025
பள்ளிப்பட்டு:பேரூராட்சியின் பூங்காவை சேதப்படுத்திய சிறுவன் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்தனர். பள்ளிப்பட்டு பேரூராட்சி அலுவலகம் எதிரே, பேரூராட்சிக்கு சொந்தமான பூங்கா உள்ளது. இந்த பூங்காவின் கம்பி வேலி, இருக்கைகள், நுழைவாயில் கதவு உள்ளிட்டவை நேற்று முன்தினம் இரவு சேதப்படுத்தப்பட்டன. இதுகுறித்து பள்ளிப்பட்டு பேரூராட்சி செயல் அலுவலர் ராஜ்குமார், நேற்று பள்ளிப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக, இருதலைவாரிபட்டடையைச் சேர்ந்த கணேஷ், 18, மற்றும் 17 வயது சிறுவன் என, இருவரை போலீசார் கைது செய்தனர்.
26-Aug-2025