மேலும் செய்திகள்
மனைவி, குழந்தைகள் மாயம் கணவர் போலீசில் புகார்
14-Sep-2025
திருத்தணி:வீட்டுமனை வாங்குவதற்கு கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட முதியவரை, ஆந்திர மாநிலத்திற்கு கடத்தி, துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்து, குட்டையில் வீசி சென்ற இருவரை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி - சித்துார் சாலை, கே.கே.நகரைச் சேர்ந்தவர் சங்கீதா, 42. இவரது தந்தை குணசீலன், 66. சங்கீதா புதிதாக கட்டி வரும் வீட்டின் கட்டுமான பணிகளை கவனித்து வந்தார். கடந்த ஜூன் 20ல், குணசீலன், வீட்டின் கட்டுமான பணிகளுக்கான பொருட்களை வாங்க, ஆந்திர மாநிலம் நகரி செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரது மொபைல் போனை தொடர்பு கொண்ட சங்கீதா, நகரி புதுப்பட்டை சேர்ந்த அய்யப்பன், 33, என்பவர், 'உன் தந்தை மதுரை சென்றுள்ளார். வருவதற்கு இரண்டு நாட்கள் ஆகும்' எனக் கூறினார். மீண்டும் தொடர்பு கொண்டபோது, 'மொபைல்போன் ஸ்விட்ச் ஆப்' ஆகி இருந்தது. சந்தேகமடைந்த சங்கீதா, திருத்தணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிந்த போலீசார் விசாரித்து வந்தனர். நான்கு நாட்களுக்கு முன், 'நகரியை சேர்ந்த அய்யப்பன், அவரது நண்பர் கங்காதரன், 57, ஆகியோர், என் தந்தையை கடத்தி சென்றனர்' என, போலீசாரிடம், சங்கீதா தெரிவித்தார். இதையடுத்து, அய்யப்பன் மற்றும் கங்காதரனை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில், குணசீலனை வெட்டிக் கொலை செய்து, உடலை துண்டு துண்டாக வெட்டி, ஆந்திர மாநிலம், நகரி தேசம்மன் கோவில் அருகே உள்ள ஒரு குட்டையில் வீசியது தெரிந்தது. இதையடுத்து, திருத்தணி போலீசார், நகரி போலீசார் உதவியுடன், குட்டையில் இருந்து கை, கால், தலை என, குணசீலனின் உடல் பாகங்களை மீட்டனர். தொடர் விசாரணையில் தெரியவந்து உள்ளதாவது: அய்யப்பன், கங்காதரன் ஆகிய இருவரும், குணசீலனிடம் வீட்டுமனை வாங்கி தருவதாக கூறி, ஆறு மாதங்களுக்கு முன், 15 லட்சம் ரூபாய் பெற்றனர். வீட்டுமனை வாங்கி தராமலும், பணத்தை திரும்ப தராமலும் ஏமாற்றி வந்தனர். குணசீலன் பணம் கேட்டு தொந்தரவு செய்ததால், கடந்த ஜூன் 20ம் தேதி பணம் தருவதாக கூறி, குணசீலனை வரவழைத்து, கொலை செய்துள்ளனர். இவ்வாறு விசாரணையில் தெரிய வந்தது. திருத்தணி போலீசார் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
14-Sep-2025