மேலும் செய்திகள்
கஞ்சா விற்பனை: வாலிபர் கைது
07-Jan-2025
சோழவரம்,சோழவரம் போலீசார் நேற்று முன்தினம் இரவு, ஆட்டந்தாங்கல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்கு சந்தேகத்திற்கு இடமாக சென்று கொண்டிருந்த இரண்டு இளைஞர்களை பிடித்து, அவர்கள் கையில் வைத்திருந்த பையை சோதனை செய்தனர்.அதில், 30,000 ரூபாய் மதிப்புள்ள, 800 கிராம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தன .தொடர் விசாரணையில் அவர்கள், சோழவரம் அடுத்த, சோலையம்மன் நகரைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக், 19, எடப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சண்முகவேல், 20, என்பது தெரிந்தது.அதையடுத்து, இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த, கஞ்சா பொட்டலங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.கைது செய்யப்பட்ட இருவரிடம் கஞ்சா பொட்டலங்களை கொடுத்து அனுப்பியவர்கள் யார் என்பது குறித்து தொடர் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
07-Jan-2025