உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கஞ்சா கடத்திய இருவர் கைது

கஞ்சா கடத்திய இருவர் கைது

திருத்தணி, டஆந்திராவில் இருந்து, திருத்தணி வழியாக, சென்னை, வேலுார் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு கஞ்சா கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.குறிப்பாக தமிழக அரசு பேருந்துகள் வாயிலாக கஞ்சா கடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று காலை, திருத்தணி போலீசார் தமிழக - ஆந்திர எல்லையான பொன்பாடி சோதனைச்சாவடியில் வாகன சோதனை நடத்தினர்.அப்போது, திருப்பதியில் இருந்து, சென்னை கோயம்பேடு செல்லும் அரசு பேருந்தை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். பேருந்தில் பயணம் செய்த சென்னை பாடியைச் சேர்ந்த முருகன், 44, பூந்தமல்லி கரையான்சாவடியைச் சேர்ந்த ரவி, 45, ஆகிய இருவரும், தங்களது பைகளில், 15 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரிந்தது. அதை தொடர்ந்து கஞ்சாவை பறிமுதல் செய்த திருத்தணி போலீசார், வழக்கு பதிந்து, முருகன், ரவி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை