உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ரேஷன் அரிசி கடத்திய இருவர் கைது

ரேஷன் அரிசி கடத்திய இருவர் கைது

திருவள்ளூர்:ஆந்திர மாநிலத்திற்கு கடத்தவிருந்த, 3,700 கிலோ ரேஷன் அரிசியை, குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.தமிழக ரேஷன் அரிசி திருவள்ளூர் மாவட்டம் வழியாக, ஆந்திர மாநிலத்திற்கு தொடர்ந்து கடத்தப்பட்டு வருகிறது. ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க, ஐ.ஜி., ஜோஷி நிர்மல் குமார் உத்தரவின்படி, திருவள்ளூர் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசீலன், எஸ்.ஐ., பாரத நேரு மற்றும் போலீசார், வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.நேற்று முன்தினம், ஆர்.கே.பேட்டை அடுத்த வங்கனுார் பகுதியில், பதிவெண் இல்லாத பஜாஜ் ஆட்டோவில், கடத்திச் செல்ல முயன்ற, 2,500 கிலோ ரேஷன் அரிசி மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்தனர். ரேஷன் அரிசி கடத்திச் சென்ற ரமேஷ், 35, கைது செய்யப்பட்டு, திருவள்ளூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.l பள்ளிப்பட்டு அடுத்த நல்லவனம்பேட்டை கிராமத்தில், ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்த, ஜெயவேல், 38, என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 1,100 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும், ஜெயவேலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருவள்ளூர் கிளை சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்