உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / டூ - வீலர் திருடிய இருவர் கைது

டூ - வீலர் திருடிய இருவர் கைது

திருவள்ளூர்:திருவள்ளூர் எம்.ஜி.எம்., நகரைச் சேர்ந்தவர் வேணுகோபால். இவர், நண்பரின் தாய்க்கு உடல்நிலை சரியில்லாததால், அவரை பார்க்க, கடந்த 27ம் தேதி இரவு 'ஸ்பிளண்டர் பிளஸ்' இருசக்கர வாகனத்தில் சென்றார்.லட்சுமி பள்ளி அருகில் இருசக்கர வாகனத்தை நிறுத்தியிருந்தார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது காணாமல் போனது தெரிந்தது. இதுகுறித்த புகாரின் படி, திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.அதில், ஆவடி லோகேஷ், 20, சின்னம்மாபேட்டை ஷியாம், 22, என்பவர்கள், இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றது தெரிந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், இருசக்கர வாகனத்தை மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ