மேலும் செய்திகள்
பயன்பாடில்லாமல் வீணாகி வரும் அங்கன்வாடி மையம்
04-Jul-2025
ஊத்துக்கோட்டை:அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்ட பெண் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.எல்லாபுரம் ஒன்றியம், ஆத்துப்பாக்கம் கிராமத்தில் உள்ள ராயல் பார்க் ரிசாட் என்ற தனியார் விடுதியில் தங்கிய சிலர் அங்கன்வாடி மையத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பறிப்பதாக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மாவட்ட திட்ட அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து திட்ட அலுவலர் லலிதா, பெரியபாளையம் போலீசார் அங்கு சென்று திருத்தணி, நெடுமரம் கிராமத்தைச் சேர்ந்த ஸ்டீபன், 45, கடம்பத்துார் புவனேஸ்வரி, 38 ஆகிய இருவரிடம் விசாரணை நடத்தினர்.அவர்கள் அங்கன்வாடி மையத்தில் வேலை வாங்கி தருவதாக பலரிடம் பண மோசடி செய்தது தெரிந்தது. அவர்கள் காரில் இருந்த, 3 லட்சத்து, 64 ஆயிரத்து, 500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. போலீசார் இருவரையும் கைது செய்து ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
04-Jul-2025