ஒதப்பை கொசஸ்தலை ஆற்றின் மேல் பயன்பாட்டிற்கு வந்த இரு பாலங்கள்
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை - திருவள்ளூர் மாநில நெடுஞ்சாலையில் ஆரணி, கொசஸ்லை ஆறுகள் செல்கிறது. மழைக்காலங்களில் இந்த ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது, இச்சாலை மார்க்கத்தில் போக்குவரத்து தடைபடுகிறது.மூன்று ஆண்டுகளுக்கு முன் ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில், 29 கோடி ரூபாயில் மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இதே மார்க்கத்தில், ஒதப்பை கிராமத்தில் கொசஸ்தலை ஆற்றின் மேல் இரண்டு மேம்பாலங்கள் கட்டும் பணி துவங்கியது.சாலையின் இடதுபுறம், 2019ம் ஆண்டு 12.10 கோடி ரூபாயில், 204 மீ., நீளம், 8 மீ., அகலத்திலும், 2020ம் ஆண்டு சாலையின் வலதுபுறம் 13.89 கோடி ரூபாயில் பணி துவங்கியது. தற்போது பணிகள் முடிந்து, இரண்டு மேம்பாலங்கள் வழியே வாகனங்கள் செல்கின்றன.மழைக்காலங்களில் கொசஸ்தலை ஆற்றில் ஏற்படும் வெள்ளப்பெருக்கால், இனி போக்குவரத்து தடைபடாது. இதனால், அப்பகுதிவாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.