மேலும் செய்திகள்
5 மாடுகள் பலி
02-Dec-2024
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை அருகே, செஞ்சியகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் குணசேகர். இவரது மனைவி மஞ்சுளா. நேற்று காலை தன் இரண்டு மாடுகளை, வயல்வெளியில் மேய்த்துக் கொண்டு இருந்தார். அப்போது மின்கம்பி அறுந்து மாடுகள் மீது விழுந்தது.இதில் இரண்டு மாடுகளும் சம்பவ இடத்திலேயே பலியாயின. இதுகுறித்து ஊத்துக்கோட்டை மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மின்வாரிய ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்தனர். ஆர்.கே.பேட்டை அடுத்த கோபாலபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். நேற்று காலை இவரது வீடு அருகே கட்டி வைக்கப்பட்டிருந்த பசுக்களில் ஒன்று மழை பாதிப்பால் இறந்தது. இது குறித்து வருவாய் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
02-Dec-2024