உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருவள்ளூரில் இரண்டு நாள் ஆட்சிமொழி பயிலரங்கம்

திருவள்ளூரில் இரண்டு நாள் ஆட்சிமொழி பயிலரங்கம்

திருவள்ளூர்:திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் ஆட்சிமொழி பயிலரங்கம் இரண்டு நாட்கள் நடக்கிறது. திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: அரசு அலுவலகங்களில் ஆட்சிமொழி திட்ட செயலாக்கம் விரைவாகவும், முழுமையாகவும் நடைபெற துணைபுரியும் வகையில் தமிழ் வளர்ச்சித் துறையால் ஆண்டுதோறும் ஆட்சிமொழி பயிலரங்கம், கருத்தரங்கம் மாவட்டம் தோறும் நடக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் 2025 - -26ம் ஆண்டின் ஆட்சிமொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம், வரும் 20 மற்றும் 21 ஆகிய இரு நாட்கள், கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் காலை 10:00 மணி முதல் மாலை 5:45 மணி வரை நடக்கிறது. மாவட்டத்திலுள்ள அனைத்து அரசுத்துறை அலுவலகங்கள், வாரியம், தன்னாட்சி நிறுவனங்களில் பணிபுரிவோர், இப்பயிற்சி கூட்டத்தில் தவறாமல் பங்கேற்க வேண்டும். பயிலரங்கத்தின் வாயிலாக ஆட்சிமொழி திட்டத்தின் இன்றியமையாமை, திட்ட செயலாக்கம் உள்ளிட்ட அனைத்து நிலைகளுக்குமான ஆட்சிமொழி திட்ட அரசாணை விளக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை