உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கணினியில் தேர்வு நடத்த தட்டச்சு பயிற்சியாளர் சங்கத்தினர் எதிர்ப்பு

கணினியில் தேர்வு நடத்த தட்டச்சு பயிற்சியாளர் சங்கத்தினர் எதிர்ப்பு

திருவள்ளூர் :கணினியில் தேர்வு நடத்தப்படும் என்ற தமிழக அரசின் உத்தரவுக்கு, தட்டச்சு பயிற்சியாளர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து, கலெக்டரிடம் மனு அளித்தனர்.தமிழக வணிகவியல் பள்ளிகள் எனப்படும் தட்டச்சு பயிற்சி பள்ளி சார்பில், திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அளித்துள்ள மனு:தமிழகத்தில், 5,000க்கும் மேற்பட்ட அரசு அங்கீகாரம் பெற்ற தட்டச்சு பயிற்சி பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அப்பள்ளிகளில், ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் தட்டச்சு பயிற்சி பெற்று வருகின்றனர். ஆண்டுதோறும், 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தட்டச்சு தேர்வு எழுதி வருகின்றனர்.தட்டச்சு பயிற்சி பள்ளிகளில், இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட தட்டச்சு பொறிகள், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கணினிகள் உள்ளன. ஆண்டுதோறும் தட்டச்சு பயிலும் மாணவ - மாணவியர் தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சு தேர்வு எழுதுகின்றனர்.இதற்காக, தட்டச்சு பொறிகளை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், வரும் 2027ம் ஆண்டு முதல் தட்டச்சு 'கம்ப்யூட்டர் ஆன் ஆபீஸ் ஆட்டோமேஷன்' எனப்படும் 'COA' தேர்வுக்கு, கணினி வாயிலாகவே தேர்வு நடைபெறும் என, அரசாணை எண் - 187 வெளியிடப்பட்டு உள்ளது.இந்த அறிவிப்பால், தமிழகத்தில் தட்டச்சு பயிற்சி பள்ளிகளில் பயிலும் மாணவ - மாணவியர், தட்டச்சு பொறி மெக்கானிக்குகள் மற்றும் குடும்பத்தினரின் வாழ்வாதரம் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, இந்த அரசாணையை ரத்து செய்து, வழக்கம்போல் தட்டச்சு பொறிகளில் மட்டுமே தேர்வு நடத்த பரிசீலிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.மனுவை பெற்ற அதிகாரிகள், தமிழக அரசுக்கு உடனடியாக பரிந்துரை செய்வதாக உறுதியளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ