உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அரசு பள்ளி மாணவ- மாணவியர்களுக்கு சரியான அளவில் சீருடை வழங்க வலியுறுத்தல்

அரசு பள்ளி மாணவ- மாணவியர்களுக்கு சரியான அளவில் சீருடை வழங்க வலியுறுத்தல்

திருவாலங்காடு:திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர் பொன்னேரி உள்ளிட்ட கல்வி மாவட்டங்களில் துவக்க பள்ளிகள் முதல் மேல்நிலை பள்ளிகள் வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் உள்ளன.இப்பள்ளிகளில் கல்வியாண்டு தோறும், மாணவ- மாணவியர்களுக்கு இலவச சீருடைகள் அரசு சார்பில் வழங்கப்படுகிறது. ஒரு கல்வியாண்டுக்கு நான்கு'செட்'கள் வழங்கப்படுகின்றன.மாணவர்களின் உடல் அளவுக்கு ஏற்ற வகையில், சீருடைகள் இருப்பதில்லை. கை கால்களை நுழைக்க முடியாதபடி சிறியதாகவும், சிறிய உடல்வாகுள்ள குழந்தைகளுக்கு மிகவும் பெரிய அளவிலும் உள்ளது.பெரியதாக உள்ள சீருடைகளை, ஆசிரியர்கள் சரிபார்த்து குழந்தைகளின் உடல் அளவுக்கு ஏற்ற வகையில் மாற்றம் செய்து வழங்குகின்றனர். ஆனால், சிறியதாக அமைந்து விடும் சீருடைகளை, மாற்றவும் முடியாமல், வீணாகிறது.இதனால், பெற்றோர் மீண்டும் புதிய சீருடைகளை வாங்க வேண்டியுள்ளது. ஒவ்வொரு கல்வியாண்டிலும் மாணவர்கள் முழுமையாக பயன்படுத்தும் வகையில், சீருடைகள் சரியான அளவுகளில் வழங்க, கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய கல்வியாண்டில் சீருடை பிரச்னைகள் இல்லாமல் இருப்பதற்கு, கல்வித்துறை முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என, பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி