உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  இருள் சூழ்ந்துள்ள ஆரணி ஆற்றுப்பாலம் மின்விளக்கு வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்

 இருள் சூழ்ந்துள்ள ஆரணி ஆற்றுப்பாலம் மின்விளக்கு வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றின் பாலத்தில் மின்விளக்கு வசதி செய்து கொடுக்குமாறு, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர். ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில் மேம்பாலம் கட்டும் பணி துவக்கப்பட்டு 2021ம் ஆண்டு போக்குவரத்திற்கு திறக்கப்பட்டது. பாலத்தின் வழியே ஊத்துக்கோட்டை, தொம்பரம்பேடு, தாராட்சி, பாலவாக்கம், தண்டலம் மற்றும் சுற்றியுள்ள, 30க்கும் மேற்பட்ட கிராமத்தினர் திருவள்ளூர் சென்று வருகின்றனர். இதேபோல், திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள பகுதி மக்கள், ஆந்திராவின் சத்தியவேடு, தடா, சூளூர்பேட்டை உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல மேற்கண்ட மேம்பாலத்தை பயன்படுத்துகின்றனர். தினமும், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்லும் இந்த மேம்பாலத்தில் மின்விளக்கு வசதி இல் லை. எனவே, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, ஊத்துக்கோட்டை மேம்பாலத்தின் மீது மின்விளக்கு வசதி செய்து கொடுக்குமாறு வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை