மேலும் செய்திகள்
பூக்குழி இறங்கிய பக்தர்கள்
19-Mar-2025
திருத்தணி:திருத்தணி, காந்தி நகரில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி விழா, கடந்த வாரம் முதல் நடந்து வருகிறது. நேற்று காலை உற்சவர் திரவுபதியம்மன், டிராக்டர் வாயிலாக சிறப்பு அலங்காரத்தில், காந்தி நகர் பகுதியில் இருந்து வேலஞ்சேரி கிராமத்திற்கு அழைத்து சென்றனர்.முன்னதாக, பக்தர்கள் அலகு குத்தியும், டிராக்டரை இழுத்தும் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர். தொடர்ந்து, மாலை 6:00 மணிக்கு வேலஞ்சேரி கிராமம் மற்றும் ஊராட்சியில் உற்சவர் திரவுபதியம்மன் சிறப்பு அலங்காரத்தில் அனைத்து தெருக்களிலும் சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று காலை 6:30 மணிக்கு உற்சவர் திரவுபதியம்மன், திருத்தணி காந்தி நகருக்கு வந்தடைகிறது.
19-Mar-2025