உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம் துவக்கம்

வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம் துவக்கம்

பொன்னேரி:வட காஞ்சி என்று அழைக்கப்படும் மீஞ்சூர் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவ விழா, கொடியேற்றத்துடன் துவங்கியது.பொன்னேரி அடுத்த மீஞ்சூரில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருந்தேவி நாயகி சமேத வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க இக்கோவிலில், வைகாசி மாத பிரம்மோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.முன்னதாக, நேற்று முன்தினம் இரவு அங்குரார்ப்பணம் நடைபெற்றது. நேற்று காலை கொடியேற்றத்தை முன்னிட்டு, வரதராஜ பெருமாளுக்கும், பெருந்தேவி தாயாருக்கும் சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடந்தன. பின், கொடியேற்றம் நடந்தது.இதையடுத்து, கொடி மரத்திற்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. வரதராஜ பெருமாள் நான்கு மாடவீதிகளில் பவனி சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பெருமாளை தரிசித்தனர்.தொடர்ந்து, 10 நாட்கள் நடைபெற இருக்கும் பிரம்மோற்சவத்தில், முக்கிய நிகழ்வாக மூன்றாம் நாள் கருட சேவையும், ஏழாம் நாள் ரத உற்கசவமும் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை