இடியும் அபாய நிலையில் வி.ஏ.ஓ., அலுவலக கட்டடம்
திருத்தணி, திருவாலங்காடு ஒன்றியம் அருங்குளம் ஊராட்சியில், 900க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு, கிராம நிர்வாக அலுவலக கட்டடம், 25 ஆண்டுகளுக்கு முன் ஒன்றிய நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டது.இந்த அலுவலகத்திற்கு வரும் கிராம நிர்வாக அலுவலர், அருங்குளம் ஊராட்சியில் உள்ள மக்களுக்கு தேவையான சான்றுகள், அரசு நலதிட்ட உதவிகள் பெறுவதற்கான சான்றுகள் வழங்கி வருகிறார்.அலுவலக கட்டடத்தை ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், தற்போது கட்டடம் விரிசல் அடைந்து இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இதனால், கிராம நிர்வாக அலுவலர் பழுதடைந்த கட்டடத்தில் அச்சத்துடனேயே பணி செய்து வருகிறார்.எனவே, மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து, பழுதடைந்த கட்டடத்தை அகற்றிவிட்டு, அதே இடத்தில் புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.