உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / இடியும் அபாய நிலையில் வி.ஏ.ஓ., அலுவலக கட்டடம்

இடியும் அபாய நிலையில் வி.ஏ.ஓ., அலுவலக கட்டடம்

ஆர்.கே.பேட்டை:இடியும் அபாய நிலையில் உள்ள வி.ஏ.ஓ., அலுவலக கட்டடத்தை இடித்துவிட்டு, புதிதாக கட்ட வேண்டும் என, ஸ்ரீவிலாசபுரம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆர்.கே.பேட்டை ஒன்றியம் ஸ்ரீவிலாசபுரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் வி.ஏ.ஓ., அலுவலகம் பராமரிப்பின்றி, இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இதன் கான்கிரீட் கூரை, முன்வாயிலில் உள்ள துாண்கள், பயனாளிகள் காத்திருக்கும் திண்ணை உள்ளிட்ட அனைத்து பகுதியுமே சேதமடைந்துள்ளன. இதனால், இங்கு பணியாற்றும் வி.ஏ.ஓ., மற்றும் கிராம உதவியாளர் மட்டுமின்றி, அப்பகுதி மக்களும் அச்சத்தில் தவித்து வருகின்றனர். ஐந்து ஆண்டுகளாக இதே நிலை நீடிப்பதால், இந்த அலுவலக கட்டடத்தை இடித்து அகற்றவும், புதிய கட்டடம் கட்டவும் அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. எனவே, வி.ஏ.ஓ., மற்றும் அப்பகுதி மக்களின் பாதுகாப்பு கருதி, சேதமடைந்த கட்டடத்தை அகற்றிவிட்டு, புதிதாக கட்ட வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ