உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சாலை தடுப்புகளை சூழ்ந்த செடிகள்

சாலை தடுப்புகளை சூழ்ந்த செடிகள்

ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை அருகே சீத்தஞ்சேரி கிராமத்தில் இருந்து பென்னலுார்பேட்டை செல்லும் சாலையில் அம்மம்பாக்கம், கூனிப்பாளையம், வெலமகண்டிகை உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளன. மேலும், இச்சாலை வழியே திம்மபூபாலபுரம், பிளேஸ்பாளையம் ஆகிய பகுதிக்கும் மக்கள் செல்கின்றனர். தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வரும் இச்சாலையின் சில இடங்களில் வளைவுகள் உள்ளன.கூனிப்பாளையத்தில் இருந்து பென்னலுார்பேட்டை செல்லும் வளைவுகளால் வாகன ஓட்டிகள் அதிகளவு விபத்தில் சிக்கி வந்தனர்.இதை தடுக்க திருவள்ளூர் நெடுஞ்சாலைத் துறையினர், வளைவின் இரண்டு பக்கமும் தடுப்புகள் அமைத்தனர். இதனால், விபத்துகள் கட்டுப்படுத்தப்பட்டன. தற்போது இந்த தடுப்புகளில் செடிகள் வளர்ந்து, தடுப்பை மறைத்துள்ளன.இதனால், வாகன ஓட்டிகளுக்கு தடுப்புகள் உள்ளதா என்பது தெரியவில்லை. குறிப்பாக இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். எனவே, கூனிப்பாளையம் வளைவில் அமைத்துள்ள தடுப்புகளில் சூழ்ந்த செடிகளை அகற்ற வேண்டும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்