| ADDED : நவ 18, 2025 03:32 AM
சென்னை: அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., சுதர்சனம் கொலை வழக்கில், வரும் 21ம் தேதி, சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு அளிக்க உள்ளது. திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ.,வான கே.சுதர்சனம், பெரிய பாளையம் தானாகு ளத்தில் வசித்து வந்தார். கடந்த 2001- - 06ல், ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில், சிறிது காலம் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்தார். கடந்த 2005 ஜன., 9ல், வீடு புகுந்து, வடமாநிலத்தை சேர்ந்த ஆறு பேர் கும்பல், அவ ரை சுட்டுக் கொன்றது. வீட்டில் இருந்த, 62 சவரன் நகை, பணத்தை கொள்ளையடித்து தப்பியது. தனிப் படை போலீசார் விசாரித்து, பவாரியா கொள்ளையர்களான ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஓம் பிரகாஷ், அவரது சகோதரர் ஜெகதீஷ் உள்ளி ட்ட ஐந்து பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர். சிறையில் இருந்த ஓம்பிரகாஷ் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். மற்ற நான்கு பேர் மீதான வழக்கு விசாரணை, சென்னை 15வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வந்த விசாரணை நிறைவடைந்துள்ளது. வரும் 21ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என, மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் அறிவித்துள்ளது.